ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள் அதற்கான நியமனக் கடிதத்தை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து இன்று (08) பாராளுமன்றத்தில் வைத்து பெற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக ஆளும் கட்சியின் துணை கொறடாவாக பதவி வகித்த ஜயந்த கொட்டகொட அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா கௌரவ அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமரின் மேலதிக செயலாளரும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர் என்று பிரதமர் ஊடகப் பிரிவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
