கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (30) அக்கரைப்பற்றில் பின்வரும் இடங்களில் நடைபெறும் என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில்,
1.அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி,
2.ஆயிஷா மகளிர் கல்லூரி,
3.அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம்,
4.அல்-பாத்திமிய்யா வித்தியாலயம்
5.பள்ளிக்குடியிருப்பு அல்- பாயிசா மகா வித்தியாலயம்.
6.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை.
ஆகிய இடங்களில் காலை 8.00மணி முதல் மாலை 4.00மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும்.
ஆகவே, இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாமல் இதனை முழுமையாக பயன்படுத்தி மற்றவர்களுக்கும் இதனை தெரிவித்து எமது பிரதேசத்தை கொரோனா தொற்றியிருந்தது விடுபட அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் அறிவித்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
July 30, 2021
Rating:

