(றிஸ்வான் சாலிஹு)
உலகெங்கிலும் உள்ள 112 நாடுகளில், கூட்டுறவு இயக்கம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் முதலாவது சனிக்கிழமையன்று, சர்வதேச கூட்டுறவுத் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற 99ஆவது சர்வதேசக் கூட்டுறவு தின நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்தின் சிறந்த செயற்பாட்டு சேவைக்காக ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஸ அவர்களால் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும், தற்போதைய கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் ஆணையாளருமாகிய ஏ.எல்.எம்.அஸ்மி தங்க விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பல்வேறு சேவைகள் மற்றும் உற்பத்திகளில் பங்களிப்புச் செய்த சனச சங்கங்களைக் கௌரவிக்கும் வகையில், அவற்றினது செயலாற்றுகையின் அடிப்படையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 21 கூட்டுறவுச் சங்கங்களுக்கே ஜனாதிபதி அவர்களினால் இந்த தங்க விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உட்பட, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
