கொரோனா நோயாளிக்கான முதலாவது சிசேரியன் சத்திரசிகிச்சை!!!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை முதலாவது கோவிட்-19 நோயாளிக்கான சிசேரியன் சத்திரசிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது என்று வைத்தியசாலை மகப்பேறு மற்றும் பெண்நோயியல் நிபுணர் டாக்டர் ஏ.சீ.முஹம்மட் முஸ்தாக் தெரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மொத்தமாக 3 கர்ப்பிணித்தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்னும் பலர் சமூகத்தில் நோயறிகளுடன் மறைந்திருப்பதில் சந்தேகமில்லை.கோவிட் வக்சீனை அடிப்பதன் மூலமே இதற்கான முடிவைக்கான முடியும் என்று வைத்திய நிபுணர் முஸ்தாக் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலில் கொராணா இருக்கிறது அல்லது இல்லையா என்ற சந்தேகம், பின்னர் வக்சீன் போடலாமா இல்லையா என்ற சந்தேகம் பொது மக்களிடத்தில் எழும்பியுள்ளது.

எனவே தேவையற்ற கட்டுக்கதைகளையும் வதந்திகளையும் நம்பாமல், தடுப்பூசியை பெற்று நம்மையும் நம் எதிர்கால சமூகத்தை பாதுகாப்பிலிருந்து பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.




கொரோனா நோயாளிக்கான முதலாவது சிசேரியன் சத்திரசிகிச்சை!!! கொரோனா நோயாளிக்கான முதலாவது சிசேரியன் சத்திரசிகிச்சை!!! Reviewed by Editor on July 25, 2021 Rating: 5