பாடசாலை அழகுபடுத்தும் செயற்பாட்டின் அடிப்படையில் மர நடுகை!!!

(றிஸ்வான் சாலிஹு)

பாடசாலையின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் செயற்பாடுகளின் அடிப்படையில் அண்மையில் தேசிய பாடசாலையாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட பட்டியலில் உள்ள அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) உள்ளக சுற்றுச்சூழல் மரக்கன்றுகளை கொண்டு அழகுபடுத்தும் நடவடிக்கையாக இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் சிலரால் மரக்கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டு அவைகள் பாடசாலையில் நடப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ்.றிபாயுடீன் தலைமையில் நேற்று (24) சனிக்கிழமை மாலை பாடசாலை நுழைவு வளாகத்தில் நடைபெற்ற மர நடுகை நிகழ்வில், மரக்கன்றுகளை அன்பளிப்பு செய்த பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை அவர்களின் கரங்களினால் நட்டு வைத்தார்கள்.

பாடசாலை அதிபர் றிபாயுடீன் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலையின் பெளதீக வள அபிவிருத்தியில் கட்டாயமாக இந்த பாடசாலையில் கல்வி கற்ற சகல பழைய மாணவர்களும் எமக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, இன்றைய சிறிய நிகழ்வுக்காக நான் அழைத்து பாடசாலைக்காக இந்த அன்பளிப்பை செய்த உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகும் தெரிவித்தார்.

அத்தோடு அதிபரினால் கோரிக்கையாக வைக்கப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெருமதியான பாடசாலை அழகுபடுத்தும் செயற்பாடுகளின் ஒன்றாக இருக்கும் மற்றொரு செயற்பாட்டை பழைய மாணவர்களாக கலந்து கொண்ட இப்பாடசாலையில் கல்வி கற்ற "1999 O/L Batch" பழைய மாணவர்கள் செய்து தருவதாகும் உறுதி மொழியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
















பாடசாலை அழகுபடுத்தும் செயற்பாட்டின் அடிப்படையில் மர நடுகை!!! பாடசாலை அழகுபடுத்தும் செயற்பாட்டின் அடிப்படையில் மர நடுகை!!! Reviewed by Editor on July 25, 2021 Rating: 5