கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட்டவளை கரோலினா தோட்டம் கடவல பிரிவு மக்களின் சுகாதார நலன் கருதி ஒரு தொகை முகக் கவசங்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் வழிகாட்டலில் இந்த முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தற்போது தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ள கடவல தோட்டத்தின் இளைஞர்கள் குறித்த முகக் கவசங்களை பொறுப்பேற்று மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
இந்த முக கவசங்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதி செயலாளர் சோ.சிறிதரன், இளைஞரணி தலைவர் சிவநேசன், பிரதேச அமைப்பாளர் பிரபு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வழங்கி வைத்தனர்.
Reviewed by Editor
on
July 04, 2021
Rating:


