(றிஸ்வான் சாலிஹு)
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், சிவனொளிப்பாத மலையின் யாத்திரைக்காக நல்லதண்ணி நகருக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் சுகாதாரத்தை கவனத்திற்கொண்டு, நல்லதண்ணி நகரின் வாகன தரிப்பிட மலசலகூடமானது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்புகள் வசதிகள் இராஜாங்க அமைச்சர் கெளரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் வேண்டு கோளுக்கமைவாக நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவு பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் மேற்பார்வையில், ஜப்பானிய நிறுவன தொழிநுட்பத்தின் ஊடாக நவீன முறையில் மலசல கூடத்தில் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
July 17, 2021
Rating:


