முன்னால் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி எரிகாயங்களுக்குள்ளாகி கடந்த 03ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அச்சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இந்நிலையில் இச்சிறுமியின் பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி தொடர்ந்து பல தடவை துஷ்பிரயோகத்திற்க்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சிறுமியின் மரணம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடைய குடும்பத்தினரிடமும், அங்கு வேலைபார்க்கும் மற்றுமொரு இளைஞரிடமும் மற்றும் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
July 17, 2021
Rating:
