கிண்ணியா தள வைத்தியசாலை பற்றிய ஆய்வு ஒன்றிற்கான திட்ட முன்மொழிவும் அதற்கான அனுமதி கோரல் கடிதமும் இன்று (26) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கிண்ணியா தள வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் ஏ.ஜே.எம்.ஜிப்ரி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
வைத்தியசாலை மக்களுக்கு வழங்கும் சேவை மற்றும் அதன் தரம் பற்றிய மக்களது கருத்தை விஞ்ஞானபூர்வமாக ஆராயும் ஆய்வு முயற்சியை கிண்ணியாவில் முன்னணி நிறுவனங்களான COD, KINNIYA VISION, KIN TV ஆகியன இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
ஆறு அமர்வுகளின் பின்னர் ஆய்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில். ஆய்வு முன்மொழிவு பற்றிய ஆவானமும் அனுமதி கோரல் கடிதமும் இன்று 2021.07.26 ந்திகதி ஆய்வுக்குழு வின் தலைவரும் COD நிறுவனத்தின் தலைவருமான M.S. முஹம்மது இக்ரிமா அவர்களால் வைத்திய அத்தியட்சகரிடம் ஆய்வுக் குழு சகிதம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் நௌஸாத் அவர்கள் முன்னிலையில் கையளிக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் ஆய்வுக்குழுவின் இணைப்பாளர் MEM. ராபிக் அவர்களும், ஆய்வின் மதிப்பீட்டாளர் ARM. பைசல், Kin TV யின் பிரதிநிதி பிரபல ஊடகவியலாளர் இர்ஷாத் இமாம்தீன், ஆய்வுக் குழு உறுப்பினர் A.L அஷ்ரப் ஆகியோர் ஆய்வுக்குழு சார்பாக சமுகமளித்திருந்தனர். தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்த ஆய்விற்கான ஆலோசகரும் இணை பங்காநிறுவனங்கள்அணியா விஷன் பணிப்பாளர் ARM சைபுள்ளா அவர்கள் சமுகமளித்திருக்கவில்லை.
இதன்போது ஆவனங்களின் பிரதி ஒன்று வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவிடமும் MEM. ராபிக் அவர்களால் கையளிக்கப்பட்டது.
இந்த ஆய்வு மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சேவைகள் சேவையின் தரம் என பல்வேறு விடயங்கள்பற்றிய மக்களது உண்மையான கருத்துக்களை விஞ்ஞானபூர்வமாக வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுந்தமானமாக கற்பனையான, ஆதாரமற்ற கதைகளை தவிர்த்து கிண்ணியாவை அடுத்த கட்ட ஆய்வு அனுமுறைக்கு இந்த முயற்சி இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இது கிண்ணியாவை மற்றுமொரு படி மேலே கொண்டு செல்லும் முதல் முறையான வரலாற்று தடம் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறுவகையான ஆய்வு நுட்பங்கள் , ஆய்வு கருவிகள் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆய்வு அறிக்கையை, அதன் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு வைத்தியசாலைக்காக தயாரிக்கப்படும் மாஸ்டர் ப்ளேன் உரிய அதிகாரங்களிடம் கையளிக்கப்படும்.
மேற்படி ஆய்விற்கான செலவு மதிப்பீடு 1,430, 000.00 (பதினான்கு இலட்சத்து முப்பதுனாயிரம் ரூபாய்கள்) என அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் செலவீனங்களின் பெரும் பகுதியை மூன்று நிறுவனங்களும் பொறுப்பேற்றுள்ளன.
அதுமட்டுமல்லாமல் இந்த முதல் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு நிரந்தரமான கிண்ணியாவிற்கான ஆய்வு மற்றும் தகவல் மையத்தையும் மேற்படி நிறுவனங்கள் நிறுவ திட்டமிட்டுள்ளன.
Reviewed by Editor
on
July 26, 2021
Rating:



