(றிஸ்வான் சாலிஹு)
நாட்டு மக்களையும் தன் குடும்பத்தையும் ஆழ்துயரத்திற்கு உள்ளாக்கிய டயகமயைச் சேர்ந்த 16 வயது சிறுமி செல்வி ஹிஷாலினியின் மரணம் மற்றும் இது போன்று இருளில் புதைந்த பல பெண்களின் ஆத்மா இறை சாந்திக்காக மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கொழும்பு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பகவானில் வியாழக்கிழமை (22) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு இளைஞர் அணி மற்றும் மலையக கலாச்சார ஒன்றியத்தினர் இணைந்து கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பணிப்புரையின் கீழ், நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலையான கொவிட் -19 சுற்று நிரூபங்களுக்கு அமைய இந்நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
July 23, 2021
Rating:






