மட்டக்களப்பு - கொழும்பு உட்பட தூர இடங்களுக்குமான பஸ் சேவைகள் ஆரம்பம்..

தடைப்பட்டிருந்த மட்டக்கள்பிற்கும் கொழும்பு உட்பட தூர இடங்களுக்குமான பஸ் சேவைகள் இன்று (15) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய மற்றும் காரியாலய சேவைகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போ ஊடாக குறித்த பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன.

நேற்றுகாலை 6.30மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான முதலாவது பஸ் சேவை ஆரம்பமானது.பதுளை யாழ்ப்பாணம் மன்னார் போன்ற தூர இடங்களுக்கும் பஸ் சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)





 

மட்டக்களப்பு - கொழும்பு உட்பட தூர இடங்களுக்குமான பஸ் சேவைகள் ஆரம்பம்.. மட்டக்களப்பு - கொழும்பு உட்பட தூர இடங்களுக்குமான பஸ் சேவைகள் ஆரம்பம்.. Reviewed by Editor on July 15, 2021 Rating: 5