அக்கரைப்பற்று காதிரியா பாடசாலையில் தடுப்பூசி வழங்கப்படாது - டாக்டர் காதர்

எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் நேற்றும் (24) இன்றும் (25) அதிகமானவர்கள் தடுப்பூசி பெறுவதற்காக வந்தமையினால் கையிருப்பில் இருந்த தடுப்பூசி முடிவடைந்துள்ளமையினால் நாளை (26) திங்கட்கிழமை அக்கரைப்பற்று  காதிரியா பாடசாலையில் இடம்பெறவிருந்த கொரோனா தடுப்பூசி நிகழ்வு நடைபெறாது என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், மீண்டும் தடுப்பு மருந்து கிடைக்கப் பெற்றதும் காதிரியா வட்டார பகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதோடு, எக்காரணம் கொண்டும் நாளை (26) காதிரியா பாடசாலைக்கு தடுப்பூசி பெற யாரும் வர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





அக்கரைப்பற்று காதிரியா பாடசாலையில் தடுப்பூசி வழங்கப்படாது - டாக்டர் காதர் அக்கரைப்பற்று காதிரியா பாடசாலையில் தடுப்பூசி வழங்கப்படாது - டாக்டர் காதர் Reviewed by Editor on July 25, 2021 Rating: 5