(றிஸ்வான் சாலிஹு)
அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ டப்ளியு. டீ. வீரசிங்க மற்றும் அவரின் பாரியார் ஆகியோர் நேற்று (17) சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் கற்றாழை உற்பத்தி திட்டம் செய்யப்படும் பயிற்சி நிலையம் மற்றும் கற்றாழை உற்பத்தி தொழிற்சாலை அமையப் பெறும் இடத்திற்கும் நேரில் வருகை தந்து திட்டம் சம்பந்தமான நகர்வுகள் குறித்து கலந்தாலோசித்து கொண்டனர் என்று இந்நிலையத்தின் பணிப்பாளரும், கிழக்கு மாகாண ஆளுநரின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கருத்திட்ட பணிப்பாளர் ஆஷாத் எம் அலியார் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இத்திட்டத்தின் மூலமாக எமது மாவட்டம் மற்றும் எமது நாட்டுக்கு ஏற்படப்போகும் சாதகமான பொருளாதார அடைவுகள் குறித்தும், இத்திட்டம் அம்பாரை மாவட்டத்தில் அமையப் பெறுவதனால் நமது மாவட்டம் இலங்கையில் ஒரு முன்னணி மாவட்டமாக மாற்றம் அடையும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்துள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய இத்திட்டம் அமைய பெறுவதனால் ஜனாதிபதி இத்திட்டம் சம்பந்தமாக மிகவும் திருப்தி அடைந்துள்ளதாகவும்,இலங்கை நாட்டின் ஏற்றுமதி அந்நியச் செலாவணியில் இத்திட்டம் ஒரு பெரும் பங்கினை வகிக்க உள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வீரசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
July 18, 2021
Rating:


