அமெரிக்க தூதுவரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்!!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் ,தூதரகத்தின் பொருளாதார பிரிவின் உயர் அதிகாரியான சுசான் எப். வல்கே மற்றும் அத்தூதரகத்தின் பிரதி அரசியல் பிரதானியான மார்க்கஸ் பீ. காபெண்டர் ஆகியோருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று வியாழக்கிழமை (22)முற்பகல்  கொழும்பு-7 இல் உள்ள தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது  இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, அதிகாரப் பகிர்வு, சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடைச் சட்டம், சிறுபான்மையினர் தொடர்பிலான நிலைப்பாடுகள் போன்றவற்றை மையப்படுத்தி ஏறத்தாழ ஒரு மணி நேரம் சுமுகமாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க தூதுவரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்!!! அமெரிக்க தூதுவரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்!!! Reviewed by Editor on July 22, 2021 Rating: 5