MBM பௌண்டேசனின் பணிப்பாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் அரசியல் ஆய்வாளருமான சட்டக் கலாநிதி முகைதீன் பாவா பௌமி அவர்கள் தனது தந்தையின் நினைவாக பல்வேறு சமூகநலப் பணிகளை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்து வருகிறார்.
அதனடிப்படையில், வறுமை ஒழிப்பு மன்றத்தின் வேண்டுகோளுக்கினங்க கிண்ணியா நடுஊற்று மஸ்ஜிதுஸ் ஸாலிஹு தக்கியாவின் கழிவறை புனர் நிர்மானப் பணிக்காக முதல் கட்டமாக MBM பௌண்டேசனினால் 50,000 ரூபா நிதியை வறுமை ஒழிப்பு மன்றத்தின் தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான உமர் அலி ரனீஸிடம் MBM பௌண்டேசனின் இணைப்பாளரும், ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான ஜனாப். இர்சாத் இமாமுதீனால் கையளிக்கப்பட்டது.
நடுஊற்று மஸ்ஜித் ஸாலிஹ் பள்ளிவாசல் கழிவறையின் முழுமையான புனர்நிர்மானத்திற்காக 126,000 கோரப்பட்டிருந்த நிலையில், அடுத்த கட்டமாக மீதித்தொகை விரைவாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதோடு, வறுமை ஒழிப்பு மன்றத்தின் செயலாளர் ஆசிரியர் ரனீஸும் இதில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
July 22, 2021
Rating:
