தங்காலை நகர சபையின் புதிய தலைவர் திரு டப்ளியு. பீ.ஆரியதாச அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (29) வியாழக்கிழமை முற்பகல் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆலோசகரான திரு.ஆரியதாச அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நகரசபை உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ரவிது வெதஆராச்சி அவர்கள் அக்கட்சியினால் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இவர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர சபையின் புதிய தலைவர் பிரதமர் முன்னிலையில் பதவியேற்பு!!
Reviewed by Editor
on
July 29, 2021
Rating:
