நாட்டில் தற்போது உக்கிரமடைந்துள்ள கொவிட்-19 நிலைமை காரணமாக மறு அறிவித்தல் வரை எவரும் ஓய்வூதிய திணைக்களத்திற்கு வர வேண்டாமென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டி. டயஸ் விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஓய்வூதியத்தை செயற்படுத்துவது தொடர்பாக நேர்முகத் தெரிவிற்கு அழைப்பது மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் திணைக்களத்திற்கு வருவது நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக இத்திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ள வேண்டிய சேவைகள் ஏதேனும் இருக்குமாயின், 1970 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு பணிப்பாளர் நாயகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Reviewed by Editor
on
August 10, 2021
Rating:

