சூடுபத்தினசேனை மஜ்மாநகர் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்க மயானத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்களின் தலைமையில் இன்று (09) திங்கட்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், ஏறாவூர், காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகள், ஓட்டமாவடி, வாழைச்சேனை பள்ளிவாயல் மற்றும் சமூக அமைப்புகளது பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொவிட்-19யின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் உயிர் நீத்த உடல்களது எண்ணிக்கை நாளந்தம் அதிகரித்து வருவதனால் சூடுபத்தினசேனை மஜ்மா நகர் மயானத்தின் இடம் விரைவாக முடிவடையும் நிலையினை அடைந்துள்ளன.
இந்த இக்கட்டாண சூழ்நிலையினையில் பொருத்தமான முடிவுகளை எட்டுவதற்கான ஆலோசனைகள் இக்கூட்டத்தில் பெறப்பட்டன என்று தவிசாளர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
August 09, 2021
Rating:
