இசங்கணிச்சீமை பகுதியில் 75சதவீத மக்கள் தடுப்பூசி பெற்றனர் - பிரதேச சபை உறுப்பினர் ஐய்யூப்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை வட்டாரத்தில் கொவிட் தடுப்பூசி வெற்றிகரமாக 75 வீதமான மக்களுக்கு செலுத்தப்பட்டது என்று அந்த வட்டார பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம்.ஐய்யூப் தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர் அவர்களின்  இல்லத்தில் இடம்பெற்ற இந்த தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் உறுப்பினர் ஐய்யூப் மற்றும் அப்பிரதேச மக்களும்  தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்கள்.

இரவு பகலாக இந்த உயரிய பணியை மேற்கொண்டு வரும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களுக்கு, இந்தப்  பிராந்திய மக்களின் நன்மை கருதி இந்த வட்டாரத்தில் தடுப்பூசியை வழங்கியமைக்காக இந்த வட்டார மக்கள் சார்பில் பிரதேச சபை உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.

அத்தோடு, இந்நிகழ்வை ஏற்பாடு செய்து ஆரம்பம் முதல் இறுதிவரை சிரமம் பாராது பணியாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர் ஜனாப் பௌமி மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் பட்டதாரி பயிளுநர்கள்  அனைவருக்கும் இத்தருணத்தில் உளம் கனிந்த நன்றியை இந்தப் பிராந்திய மக்கள் சார்பாக தெரிவிப்பதாக உறுப்பினர் ஐய்யூப் தெரிவித்துள்ளார்.









இசங்கணிச்சீமை பகுதியில் 75சதவீத மக்கள் தடுப்பூசி பெற்றனர் - பிரதேச சபை உறுப்பினர் ஐய்யூப் இசங்கணிச்சீமை பகுதியில் 75சதவீத மக்கள் தடுப்பூசி பெற்றனர் - பிரதேச சபை உறுப்பினர் ஐய்யூப் Reviewed by Editor on August 03, 2021 Rating: 5