காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது, பாசிச புலிகள் நடத்திய தாக்குதலில் 124 பேர் பலியான தினம் இன்றாகும்.
1990ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம், 03ஆம் திகதி – பாசிசப் புலிகள் அமைப்பினர் இந்தத் தாக்குதல்களை நடத்தினர் என்பது உலகத்தார் அறிந்த விடயமாகும்.
இந்தக் கோரச் சம்பவத்தில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் இன்றைய நாள் (ஆகஸ்ட் 03) ‘சுஹதாக்கள் தினமாக அவ்வூரில் அனுஷ்டிக்கப்படுகிறது.
காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இஷா தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது பாசிசப் புலிகள் கைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளாலும் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
“தொழுகைக்காக வந்த சிலரை ‘உள்ளே அவசரமாகச் செல்லுங்கள்’ என பள்ளிவாசலுக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு இன விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொண்டு ஆயுதம் ஏந்திய புலிப்படையினர்,தமிழ் பேசும் மற்றொரு சமூகமான முஸ்லிம்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியமையானது அவர்களின் பயங்கரவாத வெறியாட்டத்துக்கு உதாரணமாகும்.
அன்றைய நாட்களில் கிழக்கு மாகாண புலிகளின் கட்டளைத் தளபதியாக திரு.கருனா அம்மான் என்பவரும் திரு.கரிஹாலன் என்பருமே அங்கம் வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்த காலத்தில் நடந்த மனிதப்படுகொலை மற்றும் இன அழிப்பு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் போது,காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை தொடர்பிலும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் வேண்டுகோளாகவும் உள்ளது.
பாசிச புலிகளின் அந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் போது மரணித்த அனைவருக்கும் மேலான சுவர்க்கம் கிடைக்கப் பிராத்த்திப்போம்.
Reviewed by Editor
on
August 03, 2021
Rating:
