கிழக்கிலங்கை கவி மரபு மற்றும் ஈழத்து நாட்டார் பாடல் மரபில் கவிகள்" இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது!!!!

 (றிஸ்வான் சாலிஹு)

உதவிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் எழுதிய " கிழக்கிலங்கை கவி மரபு மற்றும் ஈழத்து நாட்டார் பாடல் மரபில் கவிகள்" இரண்டு நூல்களில் வெளியீடு நேற்று (31) சனிக்கிழமை காலை 9.30மணிக்கு அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைகழக முன்னாள் மொழித்துறை தலைவர் பேராசிரியர் செ.யோகராசா அவர்களும், கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசீம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பட்டய நில அளவையாளர் ஏ.எல்.முகைடீன் பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிஞர் அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்கள் வரவேற்புரையையும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அகமட் கியாஸ் அவர்கள் வாழ்த்துரையையும், நூல் தொடர்பான உரையை ஆய்வாளர் சிறாஜ் மஸ்ஹூர் அவர்களும், நூலாசிரியர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

பிரதம அதிதிக்கு நூலாசிரியர் பொன்னாடை போர்த்தியும், நூலாசிரியர் ஹனிபா இஸ்மாயிலை அவர்களுடை மாணவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

மெளலவி அக்கரைப்பற்று சுக்கூர் மற்றும் எழுகவி அப்துல் ஜலீல் ஆகியோரின் கவிகளும் நிகழ்வுக்கு வந்தோரின் மனதை குளிர்ச்சியடைய செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் சுகாதார வழிமுறைகளுக்கவைமாக  கலந்து சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






















கிழக்கிலங்கை கவி மரபு மற்றும் ஈழத்து நாட்டார் பாடல் மரபில் கவிகள்" இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது!!!! கிழக்கிலங்கை கவி மரபு மற்றும் ஈழத்து நாட்டார் பாடல் மரபில் கவிகள்" இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது!!!! Reviewed by Editor on August 01, 2021 Rating: 5