சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக அதிகாரிகள் கள விஜயம்

(சம்மாந்துறை நிருபர்)

நாட்டின் விவசாயத்துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு“ தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக நாடு தழுவிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் விவசாயிகளினால் சேதன உரம் (கொம்போஸ்ட் உரம்) தயாரிக்கும் முயற்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையிலான சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் விவசாய அமைப்புகளின் சம்மேளனத் தலைவருமான  ஏ.எம் நெளசாட் , மல்வத்தை விவசாய விரிவாக்கல்  நிலைய பொறுப்பதிகாரி எம்.டி.ஏ.கரீம், சம்மாந்துறை விவசாய விரிவாக்கல்  நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.நளீர், கிராம சேவகர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு  நேற்று (22) மாலை கள விஜயத்தினை மேற்கொண்டு  சேதன உர உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான மேலதிக ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.








சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக அதிகாரிகள் கள விஜயம் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக அதிகாரிகள் கள விஜயம் Reviewed by Editor on August 23, 2021 Rating: 5