(இர்பான் முஹிடீன்)
எதிர்வரும் 2021.08.25 ஆம் திகதியன்று இறக்காமம் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளேன் என்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக தற்போது கடமையாற்றும் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அக்கரைப்பற்று மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2012 ஆம் வருடம் முதல் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் 2019.01.02 முதல் பிரதேச செயலாளராகவும் 09 வருடங்கள் மிகத் திருப்தியுடன் கடமையாற்ற கிடைத்ததையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
அக்கரைப்பற்று மாநகரம் மற்றும் பிரதேச சபை பொது மக்களின் சேவைக்காகவும் இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்காவும் உற்பத்தி திறன் மிக்க காரியாலய சூழலை உருவாக்குவதில் உங்களுடன் நின்று பணியாற்றியது என்றும் மறவா நினைவுகளுடன் இருக்கும் என நம்புகின்றேன்.
இப்பிரதேசத்தின் பொது நிர்வாகம், திட்டமிடல், அபிவிருத்தி , சமூகநலச் சேவை, விவசாயம், சுகாதாரம், அனர்த்த முகாமைத்துவம், வறுமை ஒழிப்பு மற்றும் மனைப் பொருளாதார மேம்பாடு என்று பல பகுதிகளில் சேவையாற்ற உங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளுக்கும் ஒத்துழைப்புக்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தனிப்பட்ட தொழில் வாழ்க்கை சிறப்புற அமைய தங்களின் பிராத்தனையை எதிர்பார்க்கின்றேன் என்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் வெளியிட்டுள்ள நன்றி தெரிவிப்பு செய்தியில் தெரிவித்துள்ளார்.
