அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விசேட வைத்திய நிபுணர் நியமனம்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வாய், தாடை மற்றும் முகம் விசேட வைத்திய நிபுணராக டாக்டர் விராஜ் ஜயசிங்க நியமிக்கப்பட்டு இன்று (23) திங்கட்கிழமை காலை முதல் தனது சேவையை ஆரம்பித்துள்ளார்.

இந்த விசேட வைத்திய நிபுணர் இவ்வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும் என்பதோடு இப்பிரதேச வாழ் மக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் என்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஷாத் எம் ஹனிபா தெரிவித்துள்ளார்.



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விசேட வைத்திய நிபுணர் நியமனம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விசேட வைத்திய நிபுணர் நியமனம் Reviewed by Editor on August 23, 2021 Rating: 5