(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை சம்பவத்துக்காக மன்னிப்புக் கோருகின்றோம் என மட்டக்களப்பு செண்ட் ஜோன்ஸ் அமெரிக்க மிஷன் தேவாலயத்தின் அருட்தந்தை ரொஹான் தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 31 ஆவது வருட நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்,
மஸ்ஜிதுல் {ஹஸைனிய்யா பள்ளிவாசலில் இன்று மாலை நடைபெற்ற வைபவத்தில் இவர் கலந்து கொண்டதுடன் சமூகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
31 வருட சுகதாக்கள் ஞாபகார்த்த தின வரலாற்றில் இன்றைய நாளில் இவ்வாறான ஒரு நிகழ்வில் ஒரு கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் கலந்து கொண்டது மிக முக்கியமான ஒரு விடயமாகும்.
இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும் என பிஸ்மி நிறுவனத்தினதும் பிஸ்மி சமாதான கற்கைகள் நிறுவனத்தினதும் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி இந்த நிகழ்வில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அருட்தந்தை ரொஹான் என்னிடம் கோரினார் இதனையடுத்து நான் அவருக்கு பள்ளிவாயல் நிருவாகிகளும் பேசியதன் பின்னர் அவர் வருகை தந்து இங்கு உரையாற்றினார்.
வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு உரையை அருட்தந்தை ரோஹான் அவர்கள் ஆற்றினார் என அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி மேலும் குறிப்பிட்டார்.
Reviewed by Editor
on
August 04, 2021
Rating:


