சினேகபூர்வ ஒன்று கூடலும் பிரியாவிடை நிகழ்வும்!!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனமும் ஜம்மியத்துல் உலமா சபையும் இணைந்து இடமாற்றலாகிச் செல்லும்  அக்கரைப்பற்று 241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி திரு.ஜனஹ விமலரத்ன அவர்களின் சேவைக்கான நன்றி நவிலலும் பொன்னாடை போர்த்தி கெளரவித்த நிகழ்வும் இன்று (06) வெள்ளிக்கிழமை ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளரும், கல்விப் பணிப்பாளருமான அஷ்ஷேக் ஏ.எம். றஃமத்துல்லாஹ், பொருளாளர் ஏ.எல். தெளபீக், உலமாக்கள், பள்ளிவாயல்களின் நிருவாகிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.





சினேகபூர்வ ஒன்று கூடலும் பிரியாவிடை நிகழ்வும்!!! சினேகபூர்வ ஒன்று கூடலும் பிரியாவிடை நிகழ்வும்!!! Reviewed by Editor on August 06, 2021 Rating: 5