ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியின் கொவிட் தடுப்பூசி பற்றிய அறிவித்தல்

நாளை (01.09.2021) புதன்கிழமை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பின்வரும் நிலையங்களில் கொரோனா தடுப்புமருந்தேற்றப்படவுள்ளது என்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

1 .மட்/மம /அறபா வித்தியாலயம்

2 .மட்/மம/ மிச்நகர் இல்மா வித்தியாலயம்

3 .றிபாய் பள்ளிவாயல்

4.மட்/மம/ ஜுப்ரியா வித்தியாலயம்

முதலாவது தடுப்பு மருந்தினை பெற்று 01மாதம் பூர்த்தியானவர்கள் அத்தோடு, இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பு மருந்தினை பெறாதவர்கள் கட்டாயம் வருகை தந்து சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இச்சந்தர்ப்பம் காலை 08.00 - 01.00 வரை நடைபெறும் என்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.




ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியின் கொவிட் தடுப்பூசி பற்றிய அறிவித்தல் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரியின் கொவிட் தடுப்பூசி பற்றிய அறிவித்தல் Reviewed by Editor on August 31, 2021 Rating: 5