தற்போது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை கடுமையாக முன்னெடுப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொவிட்-19தொற்று காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதால் அரச வருமானம் பெருமளவு குறைந்துள்ளதோடு, தொடர்ச்சியான செலவுகளிற்கு கூட அதுபோதுமானதாகயில்லை என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் சுகாதாரதுறையில் ஏற்பட்ட மேலதிக செலவீனங்கள் நிவாரணம் வழங்குதல் போன்றவை காரணமாக இந்த ஆண்டுக்கான செலவீனங்கள் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாகயிருக்கும் என நிதியமைச்சர் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதிலும் ஆரம்பிக்கப்படாத கட்டுமான திட்டங்கள் போன்றவற்றை நிறுத்துமாறு நிதியமைச்சு அமைச்சுகளிற்கு அறிவுறுத்தியுள்ளதோடு, அரச சேவைகளிற்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை இடை நிறுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
(தினக்குரல்)
Reviewed by Editor
on
September 01, 2021
Rating:
