அக்கரைப்பற்று நோநேம் கிரிக்கெட் அணி வெற்றி

(எஸ்.எம்.அறூஸ்)

அக்கரைப்பற்று நோநேம் கிரிகெட் அணிக்கும், நிந்தவூர் இம்ரான் கிரிக்கெட் அணிக்குமிடையிலான நட்புறவு கடினபந்து கிரிக்கெட் போட்டியில் நோநேம் அணி 4 ஓட்டங்களினால்  வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இம்ரான் அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோநேம் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். 

இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரா்களான இம்ராஸ் கான்  25 பந்துகளுக்கு முகம்கொடுத்து 61 ஓட்டங்களையும், சஹீன் 34 பந்துகளுக்கு முகம் கொடுத்து 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதில் இம்ராஸ் கான் 4 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளை அடித்ததுடன், சஹீன் ஒரு சிக்ஸரையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரரான அத்தீப் 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இம்ரான் அணியின் சார்பாக றிஸ்னி 28 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுக்களையும்,வஸீம் 34 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும், நிக்ஸி அஹமட் 45 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.

வெற்றி பெறுவதற்கு 199 ஓட்டங்களைப்பெறுவதற்காக பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய இம்ரான் அணியினர் 8 விக்கட்டுக்களை இழந்து 20 ஓவர் முடிவில் 194 ஓட்டங்களைப்பெற்று 4 ஓட்டங்களினால் தோல்வியடைந்தனர்.

இம்ரான் அணியின் சார்பாக துடுப்பாட்டத்தில் றிஸ்னி 36 பந்துகளை எதிர்கொண்டு 69 ஓட்டங்களையும், றிப்னாஸ் 14 பந்துகளை எதிர்கொண்டு 25 ஓட்டங்களையும்,நஜாத் 12 பந்துகளை எதிர்கொண்டு 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதில் றிஸ்னி 2 சிக்ஸர்களையும், 9 பவுண்டரிகளையும் விளாசினார்.

பந்துவீச்சில் நோநேம் அணியின் சார்பாக முகம்மட் அலி 33 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும்,பஸாட் 36 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும்,சப்னி 34 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும், இம்ராஸ் கான் 43 ஓட்டங்களைக்கொடுத்து ஒரு விக்கட்டினையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் அக்கரைப்பற்று நோநேம் அணியினர் 4 ஓட்டங்களினால் நிந்தவூர் இம்ரான் அணியினரை தோற்கடித்தனர்.

அக்கரைப்பற்றுப் பிராந்தியத்தில் நோநேம் கடினபந்து கிரிக்கெட் அணி மிகச்சிறந்த அணியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




அக்கரைப்பற்று நோநேம் கிரிக்கெட் அணி வெற்றி அக்கரைப்பற்று நோநேம் கிரிக்கெட் அணி வெற்றி Reviewed by Editor on August 03, 2021 Rating: 5