(றிஸ்வான் சாலிஹு)
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக சுந்தரம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் கல்வி வலயத்தில் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் இன்று (09) திங்கட்கிழமை முதல் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருக்கோவில் கல்வி வலய பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,தேசிய கல்வி நிறுவகத்தின் சித்திர பாடத்திற்கான வளவாளர்களில் ஒருவராகவும், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வளவாளராகவும், கட்டுப்பாட்டுப் பரீட்சகராகவும் அத்தோடு, ஓவியம் சிற்பம் இசை நாடகம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமை கொண்டவர் ஆவார்.
Reviewed by Editor
on
August 09, 2021
Rating:
