கொவிட்வட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களை சிகிச்சைக்கு உட்படுத்துவது தொடர்பில் இன்று (19) முதல் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தொற்றுக்கு உள்ளானவர்களின் நோய் நிலைமைக்கு அமைய சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல் அல்லது வீட்டில் வைத்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பிலேயே புதிய முறை கொண்டுவரப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தினுள் இந்த புதிய முறைமையானது செயற்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கோவிட் - 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய சுவாசக் கோளாறுகளை கொண்டுள்ள நோயாளர்கள் A எனவும், காய்ச்சல் கொண்டுள்ள நோயாளர்கள் B எனவும், எவ்வித நோய் அறிகுறிகளும் கொண்டிராத நபர்கள் C எனவும் குறிப்பிட்டு சிறிய இடைவெளிவிட்டு, வயதை பதிவு செய்து அதன்பின்னர் சிறி இடைவெளி விட்டு, தேசிய அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து பின் சிறிய இடைவெளி விட்டு, முகவரியை உள்ளீடு செய்து 1904 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குறுந்தகவலின் அடிப்படையில் நோயாளர்களை சிகிச்சைக்கு உட்படுத்தும் முறை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
August 19, 2021
Rating:
