இறக்காமம் புதிய பிரதேச செயலாளராக எம்.எஸ்.எம். றஸான் (நளீமி) கடமையேற்றார்

(றிஸ்வான் சாலிஹு)

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக  அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸான் (நளீமி) அவர்கள் இன்று (25) புதன்கிழமை தனது கடமைகளை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்து நிலையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இடமாற்றத்திற்கமைவாகவே இவர் இங்கு இடமாற்றலாகி வந்தார்.

உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் இடம்பெற்ற இந்த கடமையேற்பு நிகழ்வு கொரோனா அசாதாரன நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் குறுகிய ஏற்பாடுகளுடன் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.




இறக்காமம் புதிய பிரதேச செயலாளராக எம்.எஸ்.எம். றஸான் (நளீமி) கடமையேற்றார் இறக்காமம் புதிய பிரதேச செயலாளராக எம்.எஸ்.எம். றஸான் (நளீமி) கடமையேற்றார் Reviewed by Editor on August 25, 2021 Rating: 5