இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம்

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இந்த தங்கப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் 2016 இல் இந்திய ஒருவரால் செய்யப்பட்ட சாதனையை முறியடித்து இலங்கையின் தினேஷ் பிரியந்த தங்கம் வென்று உலக சாதனை படைத்தது வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.








இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் Reviewed by Editor on August 30, 2021 Rating: 5