(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்காக பெட்டி மற்றும் பை என்பவைகள் காத்தான்குடியிலிருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் முயற்சியினாலும் அவரின் நடவடிக்கையினாலும் இந்தப் பெட்டிகளும் பைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து 50 பெட்டிகள் வழங்கப்பட்டன. அதே போன்று சடலம் வைக்கப்படும் பைகள் காத்தான்குடியிலுள்ள தனவந்தர்களினால் வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்த 50 பெட்டிகளும் கடந்த வாரமே முடிவடைந்த நிலையில் மேலும் சில பெட்டிகள் காத்தான்குடியிலுள்ள நலன் விரும்பிகளால் அடித்து கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பெட்டிகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இன்று 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை வரை 58 சடலங்களுக்கு இவ்வாறு இலவசமாக பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் முஸ்லிம் கிறிஸ்தவ ஹிந்து என அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களுக்கு இந்தப் பெட்டிகளும் பை களும் இங்கிருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருவதுடன் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களுக்காக இப் பெட்டிகளை எவர் கோரினாலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் 11 பெட்டிகள் இது வரை மாற்றுமத சகோதரர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
காத்தான்குடி நகர தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் ஏற்பாட்டில் குறித்த பெட்டிகளுக்கு காத்தான்குடி நகர சபை ஊழியர்களினால் கௌ;ளை பொலிதீன் அடிக்கப்பட்டு உள் பெட்டி வெள்ளை பொலிதீனினால் மறைக்கப்பட்டு இலவசமாக பெட்டிகள் வழங்கப்படுவதுடன் காத்தான்குடி நகர சபை வாகனத்திலேயே சடலங்கள்; ஏற்றப்பட்டு ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மாவட்டத்தில் ஏனைய வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றினால் மரணித்த ஆறு பேரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கும் இவ்வாறு பெட்டிகளும் பைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்று வரை (28.08.2021) 58 பெட்டிகளும்; பைகளும் இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஓட்டமாவடி மஜ்மா நகர் சூடுபத்தின சேனை மைய்யவாடியில் கொவிட் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை காத்தான்குடி நகர சபைக்கு சொந்தமான வாகனத்திலேயே கொவிட் ஜனாசாக்களை ஏற்றிச் செல்கின்றனர்.
காத்தான்குடி மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை காத்தான்குடி நகர சபைக்கு சொந்தமான வாகனத்தில் இன மத பேதமின்றி ஏற்றி கொடுக்கப்படுகின்றது.
இவைகளை ஒழுங்குபடுத்தி செயற்படுத்துவதற்காக காத்தான்குடி நகர தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் தலைமையிலும் மேற்பார்வையிலும் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தரும் தவிசாளரின் இணைப்புச் செயலாளருமான சப்ரி பசீர் நியமிக்கப்பட்டு இப் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார்.
குறித்த பெட்களும் பைகளும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
Reviewed by Editor
on
August 29, 2021
Rating:

