(கிண்ணியா செய்தியாளர்)
கிண்ணயா தள வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ. எம். ஜவாஹீர் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ்.தெளபீக் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (23) திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இச்சந்திப்பில் வைத்தியசாலை சம்மந்தமான சகல விடயங்களும் கலந்துரையாடப்பட்டதோடு, வைத்தியசாலையின் அவசர தேவைப்பாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் மிக விரைவில் செய்து வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா தள வைத்தியசாலை சம்மந்தமான கலந்துரையாடல்
Reviewed by Editor
on
August 23, 2021
Rating:
