டயகம யுவதி இஷாலினி தீக்காயங்களுடன் உயிரிழந்த விவகார வழக்கில் ஐந்தாவது சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை பெயரிடுவதற்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றம் இன்று (23) திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது.
இசாசம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் அவர்களின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிப்பெண்ணான பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென தீப்பற்றி எரிந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார் இச்சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது.
