அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த செ. றசீனா உம்மா என்பவரை கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
அவர், காணாமல் போகும் போது நாவல் நிற சேலையும், பச்சை நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தார்.
அத்தோடு, நெற்றியில் அறுவை சிகிச்சை செய்த அடையாளம் ஒன்றும் உள்ளதோடு, அநேகமாக கையில் ஒரு பையுடன் இருப்பார்.
இவரை கண்டவர்கள் 0757261014 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தயவுசெய்து தெரியப்படுத்துமாறு அக்குடும்பத்தினர் வினயமாக கேட்டுக் கொள்கின்றனர்.
ஆறு நாட்களாக தேடப்படும் தாய், கண்டு பிடிக்க உதவுங்கள்
Reviewed by Editor
on
August 22, 2021
Rating:
