கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தின நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)

பாகிஸ்தான் நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று (14) சனிக்கிழமை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தாணிகா் அலுவலகத்தினால் கொழும்பில் கொண்டாடப்பட்டது. 

பாகிஸ்தான் உயர்ஸ்தாணிகா் ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் அவா்கள் தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. 

பாகிஸ்தான்  உயா்ஸ்தாணிகரின் செயலாளா் பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி அரீப் அலவியின்  75வது சுதந்திர தினச் செய்தியை வாசித்தாா். 

நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தாணிகா்,

பாகிஸ்தான் என்ற நாட்டுக்கு வித்திட்ட மொஹமட் அலி ஜின்னாவின் அத்துடன் அல்லாமா இக்பால் ஆகியோா்களது தீக்கதரிசனத்தையும் அவர்களது தலைமைத்துவத்தினாலும் உலகில் ஒரு தலை சிறந்த நாடாக பாகிஸ்தான் வளா்ந்து வருகின்றது என அவரை நினைவு கூா்ந்து உரையாற்றினா்  இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவிவருகின்ற கஸ்மீா் பிரச்சினை சுமுகமாக சமாதானமாக தீா்க்கப்படல் வேண்டும். 

இலங்கை பாகிஸ்தான்  நாடுகளுக்கிடையிலான உறவுப்பாலம்  கடந்த 75 வருடங்களாக மிக்க கட்டுக்கோப்புடன் நட்புறவாக  நிலவி வருகின்றது. 

இலங்கையின் கடந்த கால தற்போதைய அரசாங்கங்களோடு அவ்வப்போது பாகிஸ்தான் நாட்டினால் முடியமான அளவு எமது உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்துள்ளோம். இலங்கை பௌத்த மக்களது காலை கலாச்சார பௌத்த மதம் சம்பந்தமான நூதனசாலைகளை பாக்கிஸ்தான் பாதுகாத்து வருகின்றது. அன்மையில் இலங்கையில் இருந்து பௌத்த குருமாா்களை பாகிஸ்தான்  அழைத்து  செல்லப்பட்டு அங்கு அவைகள் காண்பிக்கப்பட்டது  இலங்கையின் பொருளாதார அரசியல்  துறையில் இருநாடுகளுக்கிடையே நீண்டகால உறவுகள் ஒத்துழைப்பும் நல்கி வருகின்றது. எதிர்காலத்திலும் அவை முன் எடுக்கப்படும்.

 உலக நாடுகளில்  நிகழ்கின்ற கொவிட் 19 தொற்று நோய் நீங்கியதும் பாகிஸ்தான் இலங்கை நட்புரவு அபிவிருத்தி விடயங்கள்  கல்வி, புலமைப்பரிசில், பொருளாதாரம், ஏற்றுமதி இறக்குமதி  பாதுகாப்பு, சுற்றுலாத்துறைகள் மேலும் விரிவுபடுத்ப்படும் என உயர்ஸ்தாணிகா் அங்கு உரையாற்றினாாா்.  

அத்துடன் உயா்ஸ்தாணிகரினால் 75 வருட சுதந்திர நினைவு தினக்கேக் வெட்டி சிறுவா்களுக்கு பகிா்ந்தளிக்கப்பபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தின நிகழ்வு கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தின நிகழ்வு Reviewed by Editor on August 14, 2021 Rating: 5