ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச இளைஞர் அமைப்பாளராக றுக்சான் நியமனம்

(றிஸ்வான் சாலிஹூ)

ஐக்கிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் அமைப்பாளராக அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளனபிரதித் தலைவரும், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சம்மேளன தலைவருமான முஹம்மட் றுக்சான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தேசிய செயற்குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் அவர்களின் பரிந்துரைக்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திசாநாயக்க அவர்களினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.




ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச இளைஞர் அமைப்பாளராக றுக்சான் நியமனம் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச இளைஞர் அமைப்பாளராக றுக்சான் நியமனம் Reviewed by Editor on August 14, 2021 Rating: 5