(அப்றாஸ் எம்.என்.எம்)
ஊரடங்கு காலப்பகுதியில் பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களினை விற்பனை செய்தல், பொருட்களை விற்பனை செய்ய மறுத்தல், பொருட்களை பதுக்கி வைத்தல், விற்பனையின் போது நிபந்தனை விதித்தல், விலைப் பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தல், கலப்படம் செய்தல், அத்தியவசிய பொருட்களை களஞ்சியப்டுதல், மேலதிக கட்டணம் அறவீடு செய்தல், காலாவதி பொருட்களை விற்பனை செய்தல், விலைப்பட்டில் இடாமல் இருத்தல், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் என்பன தொடர்பான புகாரினை உடனே மாவட்ட நூகர்வேர் அதிகார சபைக்கு தொலைபேசி ஊடாக தெரிவிக்க முடியும்.
நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலின் பண்டார நவரத்ண அவர்களின் தொலைபேசி இலக்கமான 0770110068 ற்கு தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சினைகளை தெரியப்படுத்துமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Reviewed by Editor
on
August 23, 2021
Rating:
