(ஏ.எல்.றியாஸ்)
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதிக்குத் தேவையான அறிவுறுத்தல் பலகைகளை பொத்துவில் றை சகவாழ்வுச் சங்கம் வழங்கியுள்ளது.
றை சகவாழ்வுச் சங்கத்திடம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் விடுத்த வேண்டுகோளுக்கினங்க, அச்சங்கம் மேற்படி அறிவுறுத்தல் பலகைகளை வழங்கியுள்ளது.
குறித்த அறிவுறுத்தல் பலகைகளை வைத்திய அத்தியட்சகரிடம் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் றை சகவாழ்வுச் சங்கத்தின் தலைவர் ஐ.எல்.ஹில்முடீன், சங்கத்தின் பிரதி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.எம்.முறுத்தலா, கணணி வடிவமைப்பாளர் எஸ்.றிசாட், ஆகியோர் கலந்துகொண்டு அறிவுறுத்தல் பலகைகளை வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்தனர்.
றை சகவாழ்வுச் சங்கமானது, பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 11, 2021
Rating:
