(அலுவலக செய்தியாளர்)
இஸ்லாமிய புது வருடத்தின் தொடக்க நாளான இன்று (11) MBM FOUNDATION இன் ஸ்தாபகத் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட விரிவுரையாளரும்,அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி பௌமி முஹைதீன் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கிண்ணியா நெடுந்தீவு கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.கே.எம்.சிஹாஜீர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் மலசலகூட புனர்நிர்மாணத்திற்காக 25,000 ரூபாவினை MBM FOUNDATION இன் இணைப்பாளரும் பிரபல ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான இர்சாத் இமாமுதீனால் கையளிக்கப்பட்டது.
அதேவேளை, நடுஊற்று மஸ்ஜிதுல் ஸாலிஹ் பள்ளிவாசல் கழிவறை நிர்மாண பணிக்கான மீதித் தொகையும் இன்று வறுமை ஒழிப்பு மன்றத்தின் தலைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான உமரழி ரணீஸிடம் கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 11, 2021
Rating:

