(றிஸ்வான் சாலிஹு)
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போராத்தின் சீருடை அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) மாலை அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா விடுதியில் அமைப்பின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஏ.பகுர்டீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சட்ட முதுமானியும், உள்நாட்டு இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளருமான எம்.ஏ.சீ.எம். உவைஸ் அவர்களினால் போரத்தின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களுக்கு புதிய சீருடை வழங்கி ழைக்கப்பட்டது.
ASRM அரிசி ஆலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்-ஹாஜ் முஸாதிக் அவர்கள் சிறப்பு அதிதியாகவும், போரத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 10, 2021
Rating:




