சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பாரிய இழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவும் நீதி வேண்டி, அயராது பாடுபட்ட சிறந்த சட்டத்தரணி இவராவார்.
இவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனினதும், அவரது குடும்பத்தினரதும் பல்வேறு வழக்குகளை முன்னின்று நடாத்தி வந்த தலைசிறந்த சட்டத்தரணி ஆவார்.
சட்டத்துறையில் பல நுணுக்கங்களை திறம்பட வெளிப்படுத்திய சட்டத்தரணி கௌரி தவராசாவின் மறைவுக்கு, எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
