தேசிய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு உத்தியோபூர்வ கடிதம் கையளிப்பு!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை கல்வி வலயத்தினுள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் உத்தியோபூர்வ நிகழ்வு இன்று (20) வெள்ளிக்கிழமை கல்முனை வலயக்கல்வி அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தக ரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசிய பாடசாலைக்கான உத்தியோபூர்வ  கடிதங்ககளை பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார்.

நிகழ்வில் விசேட அதிதியாக காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர்   ஏ.எம்.ஜாஹிர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியு .டி. வீரசிங்கவின் இணைப்பாளர்களான எம்.எம்.ஜெளபர், எ. எல்.மீராஸாஹிப்,  எஸ்.வினோத், எஸ்.எம். ஜெஸில், டி.ஹிருஸ்னராச்  றிஸ்லி முஸ்தபாவின் செயலாளர்  ஏ.எச். அல் - ஜவாஹிர்  மற்றும் கல்முனை கல்வி வலய  கணக்காளர் வை .எம். ஹபிபுல்லா, பொறியலாளர்  ஏ.எம் .சாஹிர் பிரதி கல்விப் பணிப்பாளர்களான ஜெயந்திமாலா , ஜிஹானா உட்பட தெரிவு செய்யப்பட்ட கல்முனை வலய அதிபர்கள் கலந்துகொண்டனர்.

கல்முனை வலய கல்வி அலுவல பிரிவில் 09 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது








தேசிய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு உத்தியோபூர்வ கடிதம் கையளிப்பு! தேசிய  பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு உத்தியோபூர்வ கடிதம் கையளிப்பு! Reviewed by Editor on August 20, 2021 Rating: 5