(றியாஸ் இஸ்மாயில், எஸ்.எம்.அரூஸ்)
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று (30) திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது.
பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது,பொருட்களினை பதுக்கி வைப்பது தொடர்பான பொது மக்களினால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன தலைமையிலான குழுவில் புலன் விசாரணை அதிகாரிகளான ஏ.எச்.எச்.எம்.நபார், இஸட்.எம்.சாஜீத், ஏ. றிஸ்வான், ஏ.எஸ்.எஸ்.அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுவளைப்பின் போது பல களஞ்சியங்களில் அனுமதி பெறாமல் நெல் மூடைகள் காணப்பட்டதோடு, வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன இதன் போது தெரிவித்தார்.
ஒரு நெல் ஆலை உரிமையாளர் தனது களஞ்சியத்தில் உள்ள பல ஆயிரம் நெல் மூடைகளை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 30, 2021
Rating:




