பிரதேச சபை உறுப்பினர் ஐயூப் அவர்களின் முயற்சியால் வுழு செய்வதற்கான நீர்த்தாங்கி அமைத்தல்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிவாசல்கள், பாடசாலைகளில் வுழு செய்வதற்கான நீர்த்தாங்கி கொண்ட நீர் இணைப்புகள் மக்களின் பாவனைக்காக நேற்று (20) வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

அல்-ஹிக்மதுல் உம்மா பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பிடம் அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ரீ.எம்.ஐயூப் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த அமைப்பின் அம்பாரை மாவட்ட பிரத்தியோக செயலாளர் ஜனாப் எஸ். எல்.எம்.அஸ்ரப் அவர்களினால் பள்ளிவாசல்கள், பாடசாலைகளில் வுழு செய்யக்கூடிய கட்டடத் தொகுதியை உருவாக்கி மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக அவைகள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதேச உறுப்பினர்,

அல் ஹிக்மதுல் உம்மா பவுண்டேஷன் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனாப்.கஸ்ஷாலி பாஹத்திஹ் அவர்களுக்கு இந்த பிராந்திய மக்கள் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு இறைவனுக்கு விருப்பமான இத்திட்டத்தை வழங்கியதற்கு இறைவனிடத்தில் இந்த பிராந்திய மக்கள் துஆ செய்து கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொண்டார்.

அதனடிப்படையில் இச்செயற்திட்டங்கள் வழங்கப்பட்ட இடங்கள்-

1)இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல்.

2)இசங்கணிச்சீமை அல் கமர் பாடசாலை 

3)ஆலம் குளம் பாடசாலை.

4)ஆலம் குளம் ஜும்மா பள்ளிவாசல்.

5)இசங்கணிச்சீமை அல் மதுர்சதுல் கமரியா கிளை பள்ளிவாசல்.

6) பள்ளிக்குடியிருப்பு அதாவுல்லா விளையாட்டு மைதானம்.

7) இசங்கணிச்சீமை மைய்யவாடி.




பிரதேச சபை உறுப்பினர் ஐயூப் அவர்களின் முயற்சியால் வுழு செய்வதற்கான நீர்த்தாங்கி அமைத்தல் பிரதேச சபை உறுப்பினர் ஐயூப் அவர்களின் முயற்சியால் வுழு செய்வதற்கான நீர்த்தாங்கி அமைத்தல் Reviewed by Editor on August 21, 2021 Rating: 5