மக்கள் நடமாட்டமின்றி இருக்கும் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள்

(றிஸ்வான் சாலிஹு)

நாடு முழுவதும் நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அரசினால் அமுல்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில், சுகாதார துறையினர் அறிவித்துள்ளதன் படி அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அத்தியாவசிய துறையச் சேர்ந்தவர்கள் பிரதான பாதைகளில் நடமாடுவதோடு, அத்துறையினரின் வாகன போக்குவரத்தும் இடம்பெறுகின்றது.

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நகரங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் பிரதான நகரங்களுக்கு வந்து செல்லுகின்ற தனிநபர்களின் ஆவணங்களும் பொலிசாரால் சோதனைக்குள்ளாக்கப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்த நகரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லது காட்சியளிக்கும் இதே வேளையில், அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைகளின் சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






































மக்கள் நடமாட்டமின்றி இருக்கும் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள் மக்கள் நடமாட்டமின்றி இருக்கும் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள் Reviewed by Editor on August 21, 2021 Rating: 5