பொத்துவில் ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் 16மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி

(ஏ.எல்.றியாஸ்)

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தின் மேல்தளம் 16மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இக்கட்டிடத்தின் மேல்தள அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு (15) வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போத, பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித், திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், கட்டிடத் திணைக்கள நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.அச்சுதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தின் முதலாம்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதன் மேல்தள அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது.

குறித்த கட்டிடத்தின் தற்போதைய நிலைமைகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்  ஐ.எல்.எம்.றிபாஸ் அக்கட்டிடத்தினை பூர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விடயம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து, மாகாண சுகாதார திணைக்களத்தினால் இக்கட்டிட அபிவிருத்திக்கென 16மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட, வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோருக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.





பொத்துவில் ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் 16மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி பொத்துவில் ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் 16மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி Reviewed by Editor on September 16, 2021 Rating: 5