தலைவனாகவே பிறந்த அஸ்ரஃப்


(கட்டுரையாளர் - எம்.எச்.முஸ்தாக் முஹம்மட்)

1948ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி இலங்கை மண்ணில் சம்மாந்துறை பிரதேசத்தில் கல்முனைக்குடி முகம்மது ஹீசையின் விதானையாருக்கும் சம்மாந்துறை மதீனாஉம்மாவுக்கும்  இரண்டாவது குழந்தையாகவும் முதலாவது ஆண் பிள்ளையாகவும் அவதரித்தார் எம்.எச்.எம்.அஸ்ரஃப். 

1969ல் சட்டக்கல்லூரி புகுமுகப்பரீட்சைக்கு தோற்றியவுடன் சிறந்த மேடைப்பேச்சாளராகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் பிரபல்யம் அடையத்தொடங்கினார்.1974ல் சட்டத்தரணியாக தொழில் புரயத்தொடங்கி 1975ல் அரச சட்டத்தரணியாகவும் நியமனம் பெற்றார்.

புத்தளம் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட போது எதுவுமே பேசாத முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான கண்டிப்புடன் கூடிய தனது ஆக்ரோசத்துக்கு அவரே தலைவராக மாறி  அவராகவே உருவெடுத்து முஸ்லிம் சமூகத்தலைவனாய் தன்னை புடம் போட்டு சரித்திரம் படைத்தார்.

தனித்துவமும் - அஸ்ரஃப்பும் 1960ஆம் ஆண்டின் பிற்ப்பாடே முஸ்லிம் அரசியலின் தனித்துவம் சிலரால் உணரப்படுகின்றது. இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகம் தனியானதொரு சமூகம் அவர்களுக்கென்ற ஆட்சி அதிகாரம் தனிமையில் வழங்கப்பட வேண்டும் அவர்களும் அதிகாரத்தின் உச்சம் தொட்ட இடங்களில் அமரவேண்டும் என எண்ணினார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் தேர்தல் கால வாக்குகளை கூட்டி அள்ளி அவர்களது விருப்புக்கு மாறாக சிங்களத்தலைமைகளும் தமிழ் தலைமைகளும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்ட வரலாறே அதிகம். 

சிங்கள தமிழ் சமூகத்துக்கென்று தனிக்கட்சிகள் இருக்கின்ற போது ஏன் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக்கட்சி இருக்கக் கூடாது என்ற மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரஃப்பின் கேள்விக்கு கிடைத்த பதில்தான் சேகு இஸ்ஸதீன் என்ற அடங்கா ஆளுமையும் முஸ்லிம்காங்கிரஸ் என்ற கட்சியும் என்றால் மிகையாகாது.

அஸ்ரஃப் மாத்திரம் ஆயுத போராட்டம் எதனையும் பெற்றுத்தராது ஆகவேதான் மக்கள் சக்தியை நெறிப்படுத்தி வழுப்படுத்தி அதன் அசைவுகள்தான் தலைமை ஒன்றின் மகத்தான வெற்றி என உரத்துச் சொன்னார்.

ஆயுத போராட்டங்களை விடுத்து மக்களை ஜனநாயக வழியில் திரட்டி ஆயுத  பலத்தையும் அசைக்கலாம் என்ற வித்தையை முஸ்லிம்களுக்குள் திணித்தார்.மாற்றுச்சக்தி என்பது மக்கள் சக்திதான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

முஸ்லிம் காங்கிரஸும் - அஸ்ரஃப்பும் வரலாற்றின் தேவைக்கேற்ப மக்களை பலிக்கடாவாக்காமல் நுட்பமான அரசியலை வடிவமைத்து முன்னெடுத்து அதில் தன்னை பொருத்தி அதனை விம்பமாக்கி வெற்றி கண்டவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரஃப். 1988ல் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தனது அரசியல் சாணாக்கியத்தாலும் தனது பன்மைப்படுத்தப்பட்ட அரசியல் நாகரிகத்தாலும் ஒரு தேசியமாநாட்டின் பிரகடணத்தின் மூலம் ஆர்.பிரமதாசாவை ஜனாதிபதியாக்கிய பெருமைக்கு சொந்தக்காரன் ஆனார் அஸ்ரஃப்.

அப்பெருமையை கொண்டு அஸ்ரஃப் தன்னை திடப்படுத்திக்கொள்ள வில்லை ஜக்கிய தேசிய கட்சியின் பங்காளியாக மாறி அரசின் உச்சமாகிப்போன அமைச்சர் பதவிக்கும் பணத்துக்கும் சோரம் போகாமால் 12.5மூ வெட்டப்புள்ளியை 5மூ குறைத்து சிறுபான்மை சமூகத்தின் உச்ச அரசியல் அதிகாரமான பாராளுமன்ற ஆசனத்தின் எண்ணிக்கையை தழிழ் முஸ்லிம்கள் அநுபவித்து அதிகரித்துக்கொள்ளும் சாதனையை செய்து முடித்தார்.

பாராளுமன்றமும் - அஸ்ரஃப்பும் 1989ல் பொதுத்தேர்தலில் முஸ்லிம்களின் உரிமைக்குரலின் உத்தரவாதத்துக்கு மக்கள் திரண்டார்கள் படித்தவர்களும் செல்வாக்குமிக்கவர்களும் பாமரர்களும் முஸ்லிம் காங்கிரஸை தீவிரமாக ஆதரிக்கத்தொடங்கினர்.அதனாலே பாராளுமனற்த்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது எனலாம்.

1989ல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு இரு பெரும்பான்மை கட்சிகளின் அதிகார பணம்படைத்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கொழும்பு கண்டி என வடக்கு கிழக்கு மாகாணத்திலும் கணிசமான வாக்குகளை பெற்றனர் என்ற செய்தியோடு முஸ்லிம் காங்கிரஸ் 09வது பாராளுமன்றத்துக்குள் தேசியப்பட்டியல் ஆசனம் உட்பட 04 குரல்களுடன் உட்புகுந்தது.

தலைவன் வெள்ளைத்தொப்பியுடன் பிஸ்மில்லாஹிர்ரஃமானிர்றஹிம் என்ற கர்சித்த குரல் 22.08.1989ல் பாராளுமன்றத்துக்குள் மாத்திரமல்ல வானொலி தேசிய சேவையில் இரவு 09.00 மணிக்கு பின்னரும் இன்று பாராளுமன்றத்தில் என்று ஒழித்துக்கொண்டே இருந்தது.

1994ல் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் சந்திரகா பண்டாரநாயக்க குமாரந்துங்கவை ஜனாதிபதியாக்கி அதே வருடம் சந்திரிகா – அஸ்ரஃப் ஒப்பந்தம் என சிறுபான்மை கட்சியான முஸ்லிம்காங்கிரஸ் வட-கிழக்குக்கு வெளியில் கூறுபோட்ட வாக்குகளுக்கு வாக்காளத்து வாங்கி பொது ஜன ஜக்கிய முன்னணியோடு வட-கிழக்குக்கு வெளியில் இணைந்து கதிரை சின்னத்திலும் வடக்கு கிழக்கில் தனித்து மரச்சின்னத்திலும் போட்டியிட்டது.

1994ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனம் உட்பட 09 ஆசனங்களுடன் ஆட்சியை திர்மாணிக்கும் சக்தியாக மாறி ஆட்சியின் பங்காளன் என உலகுக்கு பறைசாட்டினார் பொதுஜன ஜக்கிய முன்னணியை அரச கட்டிலில் ஏற்றியவர் அஸ்ரஃப்தான் என்ற பெருமைக்கும் சொந்தக்காரன் ஆனார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் முஸ்லிம் அமைச்சராக தன்னை பிரகடனப்படத்தினார்.அப்போது கிடைக்கப்பெற்ற துறைமுகங்கள் கப்பல்துறை புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சினை தன் தலை மேல் சுமந்து மக்களுக்கு அளப்பெரும் சேவைகளை நிறைவாகச் செய்தார்.

துறைமுகத்தின் முகதோற்றங்களாகவே பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொழில்களை அள்ளிக்கொடுத்து பல குடும்பங்களின் வாழ்வினை உயர்த்தி வைத்தார். புனர்வாழ்வு என பலரை வாழவைத்தார்.

முஸ்லிம்காங்கிரஸ் ஆரம்பகர்த்தாக்கள் தொட்டு அதன் செயற்ப்பாட்டாளர்களையும் அதன் உயர்பீட உறுப்பினர்களையும் அரச பதவிகள் கொண்டு செயலாளர்கள் - இணைப்பாளர்கள் - பணிப்பாளர்கள் உதவித்தவிசாளர்கள் என அலங்கரித்து மக்கள் மத்தியில் கௌரவம் உள்ள மனிதர்களாக மாற்றி மக்களால் அவர்களை போற்றப்படச்செய்தார்.

இளைஞர் சமூகத்தை அடுத்த கட்ட அரசியலுக்கு முன்னோக்கி எடுத்துச்செல்லும் பணிகளை விரிவாக்கி விரைந்தார்.

அதில் கண்டெடுத்த சிலரே இப்போதும் பரவிக்கிடக்கின்றனர் 

முஸ்லிம் காங்கிரஸ் என்ற நாமத்துக்குள் மறைந்து மடிந்து ஒழிந்து இப்போதைய ஆட்சிஅதிகாரத்தலைமைகளின் சிபாரிசின் வரப்பிரசாதத்துக்கும் காத்திருக்கும் எட்டப்பர்களையும் அரசியல் அரங்குக்குள் அரங்கேற்றியதையும் அஸ்ரஃப்பின் அரசியல் வரலாற்றில் பதியாமல் விட முடியாது.

ஆட்சி அதிகாரமும் - தேசிய ஜக்கிய முன்னணியும் பெரும் தலைவர் அஸ்ரஃப் 1998ல் தேசிய ஜக்கிய முன்னணி (நுஆ) என்ற கட்சியை உருவாக்கினார். மதவாதமும் இனவாதமும் இனிவரும் சந்ததி அரசியல் எவ்வித தாக்கத்தையும் ஏற்ப்படுத்த முடியாது என்ற எண்ணமே ஆகும். முஸ்லிம் சிறுபான்மை சமூகம் ஏனைய சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டு அவர்களை பிரித்தாளும் முகவுரையாக முஸ்லிம் தனித்துவ அரசியல் வெளிக்காட்டப்படும் என்பதை அஸ்ரஃப் அப்போதே உணர்ந்து கொண்டார்.

இலங்கைத்தேசம் மக்களை மதத்தாலும் எல்லைகளாலும் பிரித்து மோதி சிதைந்து சிதிலங்களாக சிதறி விட அஸ்ரஃப் விரும்பவில்லை அதனல்தான் மூவின மக்களையும் இணைத்துக்கொண்ட புதிய தேசிய அரசியலுக்குள் தன்னை தேசிய ஜக்கிய முன்னணி (நுஆ) என ஆரம்பம் செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸை கலைத்து விட முடிவு செய்தும் தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவரே முஸ்விம் காங்கிரஸ் தலைவராகவும் செயற்ப்படுவார் என்ற சரத்தை உட்புகுத்தி மரச்சின்னத்தையே  தேசிய ஜக்கிய முன்னணியின் சின்னமாக மாற்றினார்.

அஸ்ரஃப் என்ற ஆழுமை ஆளத்தொடங்கி விட்ட அச்சரங்களை கண்டு இலங்கை அரசியல் தலைவர்களும் அவரோடு கூட இருந்தவர்களும் எதிரிகளும் அவரை வீழ்த்தி விடும் பல சதிகளில் அவரை சிக்கித்திணற வைத்தார்கள். ஆளும் கட்சி அமைச்சர்கள் அஸ்ரஃப்பை சவாலுக்குட்படுத்தி கிள்ளுக்கீரையாக மதிப்பிடத்தொடங்கினர்.

கடைசித்தறுவாயும் - அஸ்ரஃப்பும்

ஆளுமை அங்கலாய்த்து அழுது புலம்பி அடங்கி நொந்து நூலாகி விடுவார் என எண்ணினார்களோ? தெரியவில்லை. ஆனால் சிங்கம் சீறிஎழுந்தது எல்லோருக்கும் அரசியலில் பாடம் கற்ப்பிக்க 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலை தனது ஆடுகளமாக மாற்றிக்கொண்ட போது ஆடுகளத்தையே அந்த ஆகாயம்; 2000 செப்டம்பர் 16ல் மறைத்துப்போனது. 

கிழக்கின் அரசியல் விடுதலைக் குரல் மேற்கிலிருந்து – கிழக்கு நோக்கிய பயணத்தில் நட்ட நடு மத்தியில் அகாலமரணமடைந்தது.

கிழக்கெல்லாம் வெளுத்து மக்கள் கண்ணீரோடு கரைந்த நாளுக்கு இன்னும் அந்த மக்கள் விடை தேடவே இல்லை.கிழக்கின் அரசியல் கீழ்த்தரமானவர்களால் நாளும் பொழுதும் மாறி மாறி சிக்கித்தவித்து சிறுமைப்பட்டுக்கிடக்கிறது. 

முஸ்லிம் அரசியல் என்ற அடையாளம் மடிந்து முஸ்லிம் தேசம் எனும் கனவினை கலைத்து கரைத்து விட்டு முஸ்லிம் தலைவர்கள் என சிலர் தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு கிராமத்துக்குள்ளும் மாவட்டத்துக்குள்ளும் ஆளுக்கொரு கட்சி வைத்து அரசியல் ஆசனங்களை அலங்கரித்து அவர்களை சோடனை செய்து கொள்ளும் காலக்கலாச்சாரத்தின் பார்வையாளர்களாகவே முஸ்லிம்கள் இன்று மாற்றப்பட்டு இருக்கிறார்கள். 

அன்று குரல் என தலையில் எம்.எச்.எம் அஸ்ரஃப்பை சுமந்தவர்கள் ஓரமாகி ஒதுங்கியே நிற்கின்றனர்.முஸ்லிம் காங்கிரஸ் உயிர் மூச்சு அதனை உருவாக்கியவர்கள் தலைவர் அஸ்ரஃப்பால் புடம் போடப்பட்டவர்கள் அரசியல் சிந்தாந்திகள் முஸ்லிம் அரசியலின் ஆவணம் என்றவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு வெளிறிக்கிடக்கின்றனர்.

முஸ்லிம் அரசியல் தனித்துவம் அதன் வீரியமிக்க கொள்கை தனிந்து விட்டது தனிக்கட்சிக்கோசம் தனித்துவக்காரவர்களின் தன்மானம் இழந்த அரசியல் செயற்ப்பாடுகளால் வீழ்ந்து வீசப்பட்டு விட்டது.

இனி இந்த மக்களின் அரசியல் கேள்விகளோடு மாத்திரமே கரைசேரும.; அஸ்ரஃப் என்ற ஆழுமையின் அரசியல் வாரிசு பிறக்கவும் இல்லை பிறக்கவும் மாட்டாது. 

இனி தலைமை கொள்ளும் திராணி யாரிடமும் இல்லை அஸ்ரஃப் வளர்த்த குரல்களின் விசைகள் பணங்களுக்காய் பரிதவித்து பதவிக்காய் தலைகுனிந்து பட்டங்களுக்காய் படம் ஓட்டுகின்றனர். கதாநாயகனும் அவனே கதாநாயகியும் அவனே பார்வையாளர்களாக குரலற்றோரின் பணத்துக்காக அவர்களை தேர்தல் காலங்களில் மாத்திரம் சுமந்து இறக்குகின்றனர் என்ற பெரும் சோகத்தை தன்மானமுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகள் நாளும் பொழுதும் உணர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.

சில பெட்டும் போலும் கிடைக்க காணும் கழக இளைஞர்களும் சமூக வளைத்தளங்களில் வீராப்பின் உச்சத்துக்கு எழுதி வடிக்கும் பலம் பொருந்திய பல்லக்கு எழுத்தாளர்களும் மிஞ்சி நிற்கும் முஸ்லிம் அரசியலின் தனித்துவம் மக்களுக்குள்ளிருந்து மனங்களால் வெறுத் தொதுக்கப்படுகின்றது.

இனி காலத்தால் முஸ்லிம் அரசியல் தனிமைப்பட முடியாது அஸ்ரஃப்பின் வாரிசுகளை தூக்கி ஒதுக்கி விட்டு படித்த நற்பண்பின் உச்சம் தொட்ட மனித நாகரீகத்தின் பண்பினைக்கொண்ட இளைஞர்களை பெரும் கட்சிகளுக்கூடாக அரசியல் முகவரி தேடிப்பிளைக்கும் அரசியல்தான் இனி வரும் காலத்துக்கு பொருந்தும்.

அவரின் வாரிசுகள் தேசிய ஜக்கிய முன்னணி என்ற அக்கட்சியைNயு விற்று ஏப்பம் விட்டனர். பெரும் தலைவன் அஸ்ரஃப்பின் கனவான மூவின மக்களும் ஒற்றுமையுடன் அமர்ந்து கொள்ளும் ஒர் கட்சியே நமது தெரிவாகி சமாதான தேசத்தில் சமத்துவத்துடன் கூடிய வாழ்வை முஸ்லிம் மக்களுக்கு வழங்க இளைஞர்கள் தாயாராக வேண்டும்.




தலைவனாகவே பிறந்த அஸ்ரஃப் தலைவனாகவே பிறந்த அஸ்ரஃப் Reviewed by Editor on September 16, 2021 Rating: 5